தியானப் பாடல்கள் | வரம் ஒன்று கேட்கிறேன் இயேசுவே |
வரம் ஒன்று கேட்கிறேன் இயேசுவே நான் உனை விரும்ப வரம் கேட்கிறேன் நிம்மதியின் சொந்தமே நீங்காத பந்தமே இன்றும் என்றும் உனை விரும்ப வரம் கேட்கிறேன் வரம் ஒன்று கேட்கிறேன் இயேசுவே நான் உனை விரும்ப வரம் கேட்கிறேன் - 2 தாயாய் தேடி வரும் உன் அன்பை விரும்புகிறேன் இடிதாங்கியாய் சுமை தாங்கும் உன் தியாகம் விரும்புகிறேன் விழிநீர் தடைபோடும் உன் தாய்மடி விரும்புகிறேன் என் இதய வலிகண்டு விழி கலங்கும் - உன் நேசம் விரும்புகிறேன் விரும்புகிறேன் எனைத் தேற்றி உயிர் கொடுக்கும் உன் வார்த்தை விரும்புகிறேன் வாழச் சொல்லி வாழ்ந்து காட்டினாய் உன் தாழ்ச்சி விரும்புகிறேன் பலர் வீழ்ச்சிக் கெழுச்சியானாய் உன் வீரம் விரும்புகிறேன் சிலுவைவரை சிதைத்துக் கொண்டாய் - உன் கொள்கை தாங்கி நின்றாய் விரும்புகிறேன் விரும்புகிறேன் |