தியானப் பாடல்கள் | வரவேண்டும் வரவேண்டும் |
வரவேண்டும் வரவேண்டும் இறை இயேசுவே - உன் வரம் வேண்டும் வரம் வேண்டும் என் இயேசுவே என் விழி மீது நீதானே ஒளியாகவே என் வழி மீது நீதானே திசையாகவே என் மொழி மீது நீதானே இசையாகவே இறைவா இறைவா இறைவா இறைவா 1. பாறை என்றொரு சீடத்தின் மேலே உன் திருப்பீடத்தை அமைத்தாயே தண்டின் மீதொரு தீபத்தைப் போலே என்னை வெளிச்சத்தில் அணைத்தாயே உன் அன்பான வேதம் என் இதயத்தின் தாகம் உன் அன்பான வார்த்தை என் வாழ்விலே இறைவா இறைவா இறைவா இறைவா -2 2. கறைகள் சுமக்கும் மனிதனின் மேலே உயர் மன்னிப்பை அளித்தாயே விதைகள் சுமக்கும் நிலத்தின் மேலே நல்ல விடியலைத் தெளித்தாயே உன் அன்பான வேதம் என் இதயத்தின் தாகம் உன் அன்பான வார்த்தை என் வாழ்விலே இறைவா இறைவா இறைவா இறைவா - 2 |