தியானப் பாடல்கள் | வான் படைகளின் ஆண்டவரே |
வான் படைகளின் ஆண்டவரே எம்மை அரவணைக்கும் தந்தையே உமது பேரன்பு எத்துணை உயர்ந்தது இரக்கமும் கருணையுமே ஒளிர்ந்திடும் இறையவனே அடைக்கலான் குருவிக்கும் அடைக்கலமே அருள் வழங்கும் பொன் ஆலயமே கோவிலின் முற்றங்களே நான் வாழ்ந்திட பேரின்பமே ஏழை என் ஆன்மாவே ஏங்கிடும் புகலிடமே - 2 ஓ.....ஓ....பேரின்பே - 2 தாயினும் சிறந்த பேரின்பே - 2 கடவுளே எனக்கு கேடயமே அருளையும் மேன்மையும் தருபவரே (2) விண்ணப்பம் கேட்பவரே செவிசாய்த்திடும் ஆண்டவரே கனிவுடன் பார்ப்பவரே நன்மைகள் பொழிபவரே ஓ.....ஓ....பேரின்பே - 2 தாயினும் சிறந்த பேரின்பே - 2 |