தியானப் பாடல்கள் | உயிரின் உறவே |
உயிரின் உறவே கலையாக் கனவே இனிய இசையே என் இயேசுவே அயரா விழியே அணையா அகலே நீங்கா நினைவே என் இயேசுவே கருவியாக்கும் தேவா கருவியாக்கும் என்னைக் கருவியாக்கும் தாகம் தணிக்க தவிக்கும் வேளை ஊற்றாய் என்னை நிறைக்கின்றாய் நலன்கள் தேடி அலையும் உலகில் நலமாய் என்னுள் இருக்கின்றாய் நாதன் உந்தன் அன்பினை நாளும் நாடுகின்றேன் நிலையாய் உந்தன் உறவில் நானும் நிறைவாய் வாழ்கின்றேன் நான் நிறைவாய் வாழ்கின்றேன் தகுதியாக்கும் தேவா தகுதியாக்கும் என்னைத் தகுதியாக்கும் கவலைக் கடலில் மூழ்கும் வேளை கரங்களால் என்னைத் தூங்கினாய் காலம் முழுதும் கலக்கம் போக்க கனிவாய் என்னைத் தேற்றினாய் தேவா உந்தன் தேடலில் தென்றலாய் மாறுகின்றேன் நானும் உந்தன் நாமத்தை நாளும் சுவைக்கின்றேன் எந்நாளும் சுவைக்கின்றேன் உறுதியாக்கும் தேவா உறுதியாக்கும் என்னை உறுதியாக்கும் |