தியானப் பாடல்கள் | உருவாகுமுன்பே என் உடன் |
உருவாகுமுன்பே என் உடன் வாழ்கின்றாய் உயிருக்குள் வந்து உன் ஆற்றல் தந்து இறைவாக்கின் மொழி பேச அழைக்கின்றாய் நீதிக்குத் தடமாகும் நெஞ்சங்கள் வாழ நோ்மைக்குத் தடையாகும் எண்ணங்கள் வீழ இளம் நெஞ்சிலே அனல் மூட்டினாய் பணிக்காகவே எனைத் தீட்டினாய் சிறுபிள்ளை துணீயேன் என்றேன் அஞ்சாதே நீ செல் என் வா்த்தைநீ சொல் என் ஆவி உன்னோடென்றாய் கட்டவும் நடவும் தகர்க்கவும் பிடுங்கவும் நட்டவன் நீயே ஆணையிட்டாய் மண்ணகம் வாழ என் உடல் என் உயிர் வழங்கிட என்னில் ஆவலிட்டாய் உயிர் கூட்டில் உன் எண்ணம் இறவாமல் வாழும் உலகத்தின் கடை எல்லை உன் சாயல் காணும் உன் வார்த்தைகள் உடன் வந்திடும் உண்மை நெறி உயிர் தந்திடும் இறையாட்சி நனவாகிடும் நற்செய்திப்பூக்கள் மலர்கின்ற நாட்கள் எளியோரின் துயர தீா்ந்திடும் இனி இல்லை அச்சம் இதயத்தில் மிச்சம் என்னை அனுப்பும் வருகின்றேன் சிதைந்திடும் வாழ்வே சீடனின் வாழ்வு உம் கரம் என்னைத் தருகின்றேன். |