தியானப் பாடல்கள் | உந்தன் பாதை எனக்கு |
உந்தன் பாதை எனக்கு வழியாகும் - இறைவா உந்தன் வார்த்தை எனக்கு வாழ்வாகும் வாழ்வதும்....... வளர்வதும்........ நான் வாழ்வதும் நான் வளர்வதும் உந்தன் செயலாகும் உந்தன் அருளாகும் தாயின் கருவில் என்னைத் தெரிந்து கொண்டீர் கண்ணின் இமைபோல் தினமும் காத்துவந்தீர் உன்னிலே நான் மகிழ்ந்து மகிழ்ந்து என் நிலை நான் மறக்கின்றேன் அன்பின் இலக்கணம் நீ அழகின் முழுமையும் நீ அருளின் களஞ்சியம் நீ - 2 குன்றின்மேலே தீபமாய்த் திகழ்ந்தேன் சிலுவையே ஜெக ஞானமாய் உணர்ந்தேன் இரவிலே நான் உன்னைக் கண்டு துயரிலே நான் துணை நின்றேன் என்னில் வண்ணம் நீ இதய வேந்தனும் நீ உயிரின் ஊற்றும் நீ - 2 |