Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் உன்னோடு நான் வாழும்  

உன்னோடு நான் வாழும் ஒருநாளே போதும்
என் வாழ்வின் பொருள் காணவே
என்னோடு நீ பேசும் ஒரு வார்த்தை போதும்
என் ஜீவன் உயிர் வாழவே
மனதினில் என்றென்றும் மாறாது உன் பாசம்
தெய்வமே உன்னாலே நான் என்றும் வாழ்வேன்
உயிராக உறவாக என் தெய்வம் ஆகும்
என் வாழ்வின் குறை தீர்த்திடும்
உன்னாலே என் வாழ்வில் எல்லாமும் மாறும்
தாயாக எனைத் தாங்கிடும்

உனை விட்டு வெகுதூரம் சென்றேன்
ஊதாரி வாழ்க்கை நான் வாழ்ந்தேன்
உன் அன்பு நெறிகள் நான் மறந்தேன்
உதவாத செயல் எல்லாம் செய்தேன்
செல்வம் சேர்த்தேன் மகிழ்வே இல்லை
உறவைச் சேர்த்தேன் உணர்வே இல்லை
என் வாழ்வை நீர் மாற்றுமே (2)

தடுமாறும் என் வாழ்க்கை ஓடம்
துணையாலே உன் கரையைச் சேரும்
விழியோரம் வழிகின்ற நீரும்
விடை தேடி உன் பாதம் சேரும்
என் வாழ்க்கையின் நம்பிக்கை நீ
உயிர் தேடிடும் உயர் செல்வம் நீ
என் வாழ்வில் எல்லாமே நீ (2)










 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்