தியானப் பாடல்கள் | உன் பேரைப் பாடாத |
உன் பேரைப் பாடாத நாவொன்று எனக்கு இருந்தென்ன பயனோ ஏழிசையே (2) உன் வாழ்வைச் சொல்லாத இதழொன்று எனக்கு இருந்தென்ன பலனோ தேன்மொழியே (2) வைகறைப் பொழுதில் கூவிடும் குயிலுடன் கலந்து நான் உன்னைப் பாடுகிறேன் (2) கடற்கரை மணலில் கவிதைகள் எழுதிடும் நுரையுடன் நான் உன்னைப் போற்றுகிறேன் (2) மலைகளின் விரிப்பில் புறப்படும் தென்றலின் இனிமையில் கலந்துன்னைத் தேடுகிறேன் (2) மலர்களின் முகத்தில் வெளிப்படும் சிரிப்புடன் கலந்து நான் உன்னை ஏத்துகிறேன் (2) அருவியின் ஒலியில் எழுந்திடும் மொழியுடன் இணைந்து நான் உன்னை நாடுகிறேன் (2) குழந்தையின் மழலை குவித்திடும் இனிப்பில் மகிழ்ந்துமே நான் உன்னை வாழ்த்துகிறேன் (2) |