Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் உன் மடியில் சாய்ந்திட  

உன் மடியில் சாய்ந்திட வருகின்றேன்
உன் கரங்கள் என்னை என்றும் தேற்றிடுமே
சுமைகளால் உள்ளம் சோர்ந்து போகையில்
உன இதய நிழல் தானே ஆறுதல்

என்னை புரிந்து கொண்ட கடவுள் நீரே
என்னைத் தாங்குகின்ற தந்தை நீரே இயேசுவே

தாயின் கருவிலே தெரிந்தவரே
மகனாக மகளாக ஏற்றவரே
எனக்காய் உயிரை தந்தவரே
எந்நாளும் என்னோடு நடப்பவரே
உலகம் என்னும் கடலிலே
துனப அலைகள் வருகையில்
போராடும் படகாய் மாறிப்போகிறேன்
எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
வழியறியா மான்போல அலைந்து திரிகின்றேன்
என்னைக் காண்பவர் நீர் ஒருவரே
என்னைக் காப்பவர் நீர் ஒருவரே இயேசுவே

அமைதியை தருவேன் என்றவரே
ஆறுதல் தாரும் ஆண்டவரே
நிழல் போல துன்பம் சூழ்கையிலே
நீங்காத நண்பனாய் இருப்பவரே
இருளடரந்த பாதையில்
ஒளியைத் தேடும் மலரென
விழிமூடி அழுகிறேன் வழிகாட்டுமே
கவலைகளும் நோய்களும் கண்ணீரும் வலிகளும்
நிதம்தோறும் நிலவு போலத்தெரிகின்றதே
இதை மாற்றிடும் வல்ல தகப்பனே
எனைச் சுமந்திடுடும் நல்ல ஆயனே இயேசுவே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்