| தியானப் பாடல்கள் | உள்ளம் உடையும் போது |
|
உள்ளம் உடையும் போது உறவாய் வா இறைவா கண்கள் கலங்கும் போது துணையாய் வா இறைவா சிறகை இழந்த பறவை போல ஒடிந்த கிளையாய் தரையில் வீழ்ந்து உம்மை பார்க்கிறேன் என் உதவி உம்மிடமே 1. உலகம் தீர்ப்பிடலாம் உம்மால் முடியுமா பார்ப்பவர் நகைக்கலாம் உம்மால் கூடுமா பாலூட்டும் குழந்தையை தாய் கூட மறக்கலாம் படைத்தவா நீர் என்னை மறப்பதில்லை உலக உறவுகள் ஒதுங்கிச் செல்லலாம் உன்னதர் நீர் என்னை பிரிவதில்லை இறைவா நீர் என்னை பிரிவதில்லை 2. என் வாழ்வின் பாதையை அறிய முடியுமா அது தரும் வேதனையை மறுக்க முடியுமா திசை மாறும் படகாய் தவிக்கின்ற வேளை பயணத்தில் துணையாய் நீர் வாருமே எல்லாமே விதியென்று வீழ்ந்திடும் வேளை நம்பிக்கை வலுவூட்டி வழிகாட்டுமே இறைவா வலுவூட்டி வழிகாட்டுமே |