தியானப் பாடல்கள் | தரிசனம் தா இறைவா |
தரிசனம் தா இறைவா - உன் அருளன்பில் வளர்ந்திடவே தரிசனம் தா இறைவா - உன் பணிவாழ்வில் மகிழ்ந்திடவே தரிசனம் தா தரிசனம் தா - உன் பணிவாழ்வில் நிலைத்திடவே - உன் பணியாய் நான் வளர்ந்திடவே பணியாளாய் வளர்ந்திடவே தரிசனம் தா இறைவா - உன் அருளன்பில் வளர்ந்திடவே கருவினில் அழைத்து கரம் தனை குவித்து எந்நாளும் காக்கின்றீர் - உன் அருள்நிறை வார்த்தையை வாழ்வாக்கிடவே பெயர் சொல்லி அழைத்துள்ளீர் தரிசனம் தாரும் தேவா நீர் (4) தரிசனம் தாரும் தேவா நீர் உறவுகள் என்னை பகைத்த போதும் உன் அன்பில் எனைக் காத்தீர் உந்தன் உறவு ஒன்றே உண்மை என்று உணர்ந்திடச் செய்து விட்டீர் தரிசனம் தாரும் தேவா நீர் (4) தரிசனம் தாரும் தேவா நீர் |