தியானப் பாடல்கள் | தேடுகிறேன் உன்னையே |
தேடுகிறேன் உன்னையே தெய்வமே நாடுகிறேன் உந்தனின் உறவையே என்றும் உன்னை அன்பு செய்யும் உள்ளத்தை இன்றெனக்குத் தாருமே தெய்வமே முழுதுமே உலகமெல்லாம் உன்னைத் தேடுமே - நான் உன்னை எண்ணி காண மறந்தேன் உலகம் தரும் இன்பங்களில் நிலைத்திருந்தேன் - உன் உறவுக் கரம் பற்றிடவே மறந்திருந்தேன் உன்னையே தந்தருள்வாய் தெய்வமே தினமுமே என்னகத்தை கூர்ந்து நோக்கினேன் - அதில் உன் முகத்தைக் கண்டு மகிழ்ந்தேன் உன்னையே அரணாக பற்றிக் கொண்டேன் - உன் அன்பையும் அருளையும் கண்டுகொண்டேன் உன்னிலே சரணடைந்தேன் தெய்வமே என்றுமே |