| தியானப் பாடல்கள் | தடுமாறும் கால்களை |
|
தடுமாறும் கால்களை தாங்கும் இயேசுவே தளர்ந்து போன என்னைத் தேற்றும் தெய்வமே காற்றினிலே அடித்துச் செல்லும் சருகு போலவே கால்கள் செல்லும் பாதையிலே பயணம் செய்கிறேன் 1. வாழ்வு என்பது உம் கொடையே உயர்வதும் தாழ்வதும் உம் சித்தமே எண்ணம் போலவே வாழ்வு அமைவதில்லையே ஏமாற்றம் ஒன்றே எந்தன் சொந்தமே வளர்ந்து செல்கையில் பல நண்பர் காண்கிறேன் வீழ்ந்து போகையில் நான் தனிமை உணர்கிறேன் என் ஆற்றல் நீரன்றோ 2. நீதி நேர்மையில் நடக்கயிலே நிம்மதியும் மகிழ்வும் மறைந்து போகலாம் புரிந்த உறவுகள் கூட பிரிந்து செல்லலாம் போராட்டம் ஒன்றே வாழ்வாகலாம் துன்பம் வருகையில் நான் துவண்டு போகிறேன் என்னுள் வாழ்ந்திடும் உம் அருளை மறக்கிறேன் என் ஆறுதல் நீரன்றோ |