Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் சுகராகம் நீயே இயேசுவே  
சுகராகம் நீயே இயேசுவே உன் நாமம் போற்றுவேன்
தெவிட்டாத நீர் சுனையாகவே கவி நூறு பாடுவேன்
மேகமாய் பொழியும் அருளும் நீ
நேசமாய்த் தாங்கும் தாய்மடி நீ
தினந்தோறும் வாழ்த்துவேன்

உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்
உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன்
அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்
அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்
நீயே எந்தன் ஜீவன் நீயே எந்தன் ஆற்றல்
நீயே இல்லையென்றால் எனது உலகம் இல்லை

கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன்
அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழக்கிறேன்
உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன்
புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன்
நீயே எனக்கு சொந்தம் நீயே வாழ்வின் தஞ்சம்
உயிரே நீயும் இல்லையென்றால் நானும் இல்லையே







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்