Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் சிறு குழந்தை போல்  

சிறு குழந்தை போல் நான் வாழவேண்டும் என் இயேசுவே - எனைக்
கரம்பிடித்து வளர்க்கும் தாய்போல் என்னை வளர்த்திடுமே
என் சிந்தையிலும் என் உள்ளத்திலும் நீ இருக்கவேண்டுமே
உன் சித்தப்படி என் வாழ்க்கையில் எல்லாம் நடக்கவேண்டுமே

கவலையின்றித் தன் அன்னை மடியில் தவழும் பிள்ளைபோல்
என்னை கருவிலிருந்து காத்திடும் தெய்வமே உன்னுடன் இருக்கின்றேன்
கடலலையைப்போல் தொடர் துன்பங்கள் வந்து மூழ்கும் வேளையிலே
என் கரங்கள் பிடித்து கனிவாய் அழைப்பது என் அன்பு தெய்வமே

கரங்கள் குவித்து கண்கள் மூடி செபிக்கும் வேளை நான்
உன் கருணை நிறைந்த இறைவனை நினைத்து என்னை மறந்துவிடு
தினம் கலங்கித் தவிக்கும் மனிதனை நீ கடவுளின் பேழைதான் - அதைக்
கண்ணின் மணிபோல் இறைவன் காப்பது என்றும் அவர் உன்னைத்தான்









 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்