தியானப் பாடல்கள் | ஒரு பாடல் உனக்காக |
ஒரு பாடல் உனக்காக நான் பாடுவேன் ஒருபோதும் உனை மறவா என் இயேசுவே தாயாக நீ இருந்து எனைக் காப்பதால் சேயாக சுமை மறந்து தோள் சாய்கின்றேன் உன் தோள் சாய்கின்றேன் அம்மையப்பன் ஆகி நின்ற தெய்வமும் நீயே ஆயனாய் ஆண்டவனாய் காப்பதும் நீயே கல்லும் முள்ளும் பள்ளம் மேடு பாதை நெடுகிலும் கரம் பிடித்து நடத்தி வந்தாய் கருணை தெய்வமே இருள் சூழ்ந்த எனது வாழ்வின் இரவுகளெல்லாம் ஒளியாக நீ நடந்து வழிகாட்டினாய் எப்படி நான் மறந்திடுவேன் உனதன்பை இயேசுவே அன்பின் சிறகில் அரவணைத்த இனிய நாட்களில் நோயின் பிடியில் தனிமைச் சிறையில் தவித்த நாட்களில் குணமளிக்கும் மருத்துவராய் வந்த தெய்வமே இடர் சூழும் எனது வாழ்வில் துயரினில் எல்லாம் காயம் தந்த காயங்களின் வலியை ஆற்றினாய் எங்கே சொல்வேன் எப்படி சொல்வேன் உனதன்பை இயேசுவே பேரன்பை நினைந்து மகிழ்ந்த இனிய நாட்களில் |