தியானப் பாடல்கள் | ஒளியான தேவான் |
ஒளியான தேவான் அருள்பாதம் தேடி நாடும் எளியோரின் கதியாக வருவாயா மனமே மனமே நீ நிலை மாறினாலும் - பொய் மனமே மனமே உன் நிலை மாற்றினாலும் - என் பார்வை உன் வாழ்வாகுமே என் உயிரே அது உன்னை மீட்குமே வருவாய் எனதுயிரினில் இணைவாய் வருவாய் நான் உனையழைத்தேன் வா நீ வாழ்வாங்கு வாழ வேறென்ன வேண்டும் சுமைகள் சுமைகள் நான் தாங்காதபோது சுமையில் சுமையில் நான் அழுகின்றபோது என் பாரம் நீதாங்கும் ஐயா என் சாபம் நீ போக்குமையா இறைவா நான் உன் வழியினில் வருவேன் இறைவா நான் உனையழைத்தேன் வா நீ வாழ்வாங்கு வாழ வேறென்ன வேண்டும் |