Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் ஒளியாக எழுந்து வா  

ஒளியாக எழுந்து வா - எந்தன்
இருளை நீக்க விரைந்து வா
ஆனந்த வாழ்வை அளிக்கவா - என்
நெஞ்சினில் ஒளியை ஏற்றவா
லலலா ...லலலா....லலலா.....

வறியோர் வாழ்வில் வளம் பெறவும் - உன்
வாதையில் தவிப்போர் குணம் பெறவும்
உரிமைகள் வாழ்வில் கிடைக்கவும்
உலகினில் நீதி செழிக்கவும்
லலலா ...லலலா....லலலா.....

ஏற்றம் வாழ்வில் தினம் பெறவும்
ஏமாற்றம் இன்றி நலம் பெறவும்
அனபினை நெஞ்சினில் விதைக்கவும்
ஆனந்த வாழ்வு மலரவும்
லலலா ...லலலா....லலலா.....


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்