தியானப் பாடல்கள் | நீயின்றி வாழ்வேது இறைவா |
நீயின்றி வாழ்வேது இறைவா - உன் நினைவின்றி மகிழ்வேது தலைவா உலகத்தில் நூறு ஆண்டு நான் வாழ்ந்தபோதும் உன் இல்லத்தில் ஒரு நாளே போதும் பல கோடி வார்த்தைகள் நான் கேட்டபோதும் - உன் திரு நாளில் சொல் ஒன்றே போதும் உன்னோடு நான் வாழ்ந்து உன் வார்த்தை நான் கேட்டு உன்னில் நான் சரணாக வேண்டும் கற்பாறையின்மீது எந்தன் வீடாகினாலும் - உன் பொற்பாத துணை நாளும் வேண்டும் உலகோரின் உறவென்னை உயர்வாக்கினாலும் - உன் கரம்தானே என்னைத் தாங்கிக்கொள்ளும் உப்பாக ஒளியாக உண்மைக்கு சான்றாக எப்போதும் நான் வாழ வேண்டும் |