| தியானப் பாடல்கள் | நீயின்றி நானில்லை |
|
நீயின்றி நானில்லை நிலையானதொன்றில்லை நினைவெல்லாம் நீ தானே இறைவா நீயின்றி நானில்லை நிலையானதொன்றில்லை நினைவெல்லாம் நீ தானே இறைவா நினைவெல்லாம் நீ தானே இறைவா உறவெல்லாம் என்னை உதறியே சென்றாலும் உறவாக நீ என்னை தேற்றவே வந்தாய் தீ நடுவே நானே திசைமாறி விழுந்தாலும் தாயாக நீ என்னை தடுத்தாட் கொண்டாய் கண்ணாக என்னை நீ கரம் நீட்டிக் காத்தாய் -2 கரம் கூப்பி உன் பாதம் சரணடைகின்றேன் -2 மலைக்குன்று எல்லாம் நிலை பெயர்ந்து சாய்ந்தாலும் நீ கொண்ட பேரன்பு நிலையானது துன்பங்கள் பல கோடி தொடந்தே வந்தாலும் துயர் துடைக்க என்னருகே நீ இருக்கின்றாய் ஒரு போதும் என்னை நீ மறந்திட மாட்டாய் -2 தாய் கூட மறந்தாலும் நீ அணைப்பாய் -2 |