| தியானப் பாடல்கள் | நீயின்றி நானில்லை இறைவா |
|
நீயின்றி நானில்லை இறைவா இறைவா இறைவா இறைவா வருவாய் வருவாய் வருவாய் வருவாய் அருள்வாய் நீயின்றி நானில்லை இறைவா - உன் உறவின்றி உயிரில்லை தலைவா (2) உன் புகழ்ப் பாடி உன்னருள் வேண்டி எந்நாளும் நான் வாழுவேன் 1. கல்வாரி செந்நீரை எனக்கெனச் சிந்தி அன்புக்கு இலக்கணம் காட்டி நின்றாய் (2) பணிவென்றால் எதுவென்று பாதத்தைக் கழுவி -2 பணிவுக்கு புதுப் பொருள் தந்துவிட்டாய் போகின்ற பாதை இருளாகிப் போனால் - என் பாதைக்கு நீயே ஒளியாவாய் 2. கண்ணீரில் வாழ்ந்த எளியவர் பலரை நெஞ்சோடு அணைத்து உயிர் கொடுத்தாய் (2) நோயுற்று நொந்த உள்ளங்கள் தேடி -2 குணம் தந்து காத்து அருள் புரிந்தாய் உறவெல்லாம் என்னை உதறிப் போனாலும் உறவாய் உயிராய் இருந்திடுவாய் |