Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்   நீ இல்லாமல் நான் இல்லை  

நீ இல்லாமல் நான் இல்லை
இன்னருள் இன்றி கதியில்லை
வாழ்விலும் தாழ்விலும் என்னுடன் இருந்தால்
என் வாழ்க்கை பேரழகு - இல்லையேல்
என் வாழ்வில் ஏதழகு -

கிளைகளோடு இருந்தால் இலை அழகு - அது
உதிர்ந்து விட்டால் இது வெறும் சருகு - ஆ.....
பறவையோடிருந்தால் சிறகழகு - அது
முறிந்து விட்டால் இது வெறும் இறகு
விளக்கினில் எரிந்தால் தீ அழகு - ஒரு
வீணையில் இருந்தால் நரம்பழகு
மண்ணினில் விழுந்தால் மழை அழகு - நம்
தண்ணீரில் தெரிந்தால் துளி அழகு
இரு கரைகளின் நடுவே பாய்வது வரைத்தான்
நதிகள் பேரழகு
அந்த கடலின் மீது தவழ்வது வரைதான்
அலைகள் பேரழகு
இறைவன் நம்முடன் இருப்பது வரைதான்
நமக்கு பேரழகு இல்லையேல் நமக்கு ஏதழகு


பூவுடன் இருந்தால் முள் அழகு - ஒரு
புன்னகை விரித்தால் சொல் அழகு ஆ .....
கருவரை இருந்தால் சிறை அழகு - ஒரு
கதிருடன் இருந்தால் நெல் அழகு
கோபுரம் அசைந்தால் கொடியழகு - ஒரு
வீதியில் வளர்ந்தால் புவி அழகு
அமைதியில் வாழ்ந்தால் ஊர்ழகு - ஒரு
அன்புடன் இருந்தால் பேரழகு
ஒரு தண்டின் மீது இருப்பது வரைதான்
தாமரை பேரழகு
நீலவானின் மடியில் நீந்திடும் வரைதான்
தாரகை பேரழகு
இறைவன் நம்முடன் இருப்பது வரைதான்
நமக்கு பேரழகு இல்லையேல் நமக்கு ஏதழகு



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்