தியானப் பாடல்கள் | நீயே துணையென்று |
நீயே துணையென்று - நிதம் உன்னை நினைக்கையில் நிம்மதி அடைகின்றேன் இறைவா நிம்மதி அடைகின்றேன் நீயே துணை நீயே துணை நீயே என் வாழ்வின் துணை - இறைவா நீயே என் வாழ்வின் துணை நேசமும் பாசமும் நிலையில்லாதிருக்கையில் தேற்றும் மேய்ப்பராய் நீயே துணை அலையாய் புயலாய் இருள் என்னைச் சூழ்கையில் ஒளியாய் வழியாய் நீயே துணை அழிவின் சக்தியில் அடிமையாகையில் என்னைக் காத்திடும் நீயே துணை துன்பவேளையில் துவளும் போதினில் மீட்கும் தெய்வமாய் நீயே துணை நாளைய கவலையில் நலிந்திடும் சூழலில் அருளாய் வரமாய் நீயே துணை அமைதி புனைகையில் காக்கும் வலிமையில் மனத்திடம் அளித்திட நீயே துணை |