| தியானப் பாடல்கள் | நீதானே எனை காக்கும் |
|
நீதானே எனை காக்கும் தெய்வம் நீங்காமல் எனைத் தாங்க வேண்டும் மணம் வீசிடும் அன்பு மலர் சோலையே மனம் பாடிடும் இனிய புகழ் பாடவே தாய் தந்தை மறந்திடினும் நீ என்னை மறப்பதில்லை தீதென்னை சூழ்ந்திடினும் நீ என்னை பிரிவதில்லை இருள் சூழும் வாழ்வில் வெளிச்சம் தந்தாய் துயர் மூடும் நேரம் தோழனாய் வந்தாய் உள்ளத்தில் உன்னைச் சுவைக்கின்றேன் வாழ்வில் நிறைவு பெறுகிறேன் உன்பணிகள் செய்வதிலே என் கரங்கள் வலிமை பெறும் உன் வழியில் நடப்பதிலே என் கால்கள் உறுதி பெறும் தளராது உழைக்க வலுவைத் தந்தாய் தவறா உன் அன்பின் நிறைவைத் தந்தாய் நிறைவினில் உன்னைக் காண்கிறேன் ஆற்றல் வலிமை பெறுகிறேன் |