Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் நீங்காத மறையே  
நீங்காத மறையே நீ எனையாள வாராய்
கலையாத கனவாக எனில் உறைய வாராய்
வாழும் தெய்வம் நீரே என்று உள்ளம் பாடுதே
உந்தன் வருகை தஞ்சம் என்று நெஞ்சம் நாடுதே
வா தேவா நீ என்னில் வாழ வா
வா தேவா எம் மண்ணை ஆழ வா

உந்தன் வேதம் தேசம் பேசும்
மனதோடு மனம் சேர வா
கண்கள் தேடும் என் சோகம் தீரும்
நலம் காண வளம் காண வா
ஒரு நாளும் ஒருபோதும் மறவாத தெய்வமே
மறுத்தாலும் வெறுத்தாலும் மறவாத தெய்வமே

பந்தம் மாறும் பாசம் தீரும்
மாறாது உன் நேசமே
விழிகள் தேடும் என் வழிகள் யாவும்
என் தேடல் நீர்தானையா
உறவின்றி உனைத்தானே உலகில் நான் பார்க்கிறேன்
தமிழோடு தவந்தாலும் தாயன்பைப் பார்க்கிறேன்









 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்