Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் நான் சிறு மூங்கில் தான்  

நான் சிறு மூங்கில் தான் என் இறைவா
நீ விரும்பும் குழலாக எனை மாற்ற வா
நீ ஊதும் காற்றினில் உயிர் வாழுவேன்
உன் விரல் அசைவினில் இசையாகுவேன் - 2
வாழ்நாளெல்லாம் இனி உன் இராகமே
வாழும் நொடிகள் அதன் சப்தஸ்வரமே - 2

உனக்காக உருவான இசைக்கருவி நான்
உன் பாடல் அரங்கேறும் சிறுமேடை நான் - 2
நிகழ்வாக என் வாழ்வில் நடப்பதெல்லாம்
நீ எழுப்பும் விண்ணிசையின் ஸ்வரக்கோர்வை தான் - 2
உன்னில் இணைந்தால் என்னில் விண்ணின் இசையே
நீ இல்லையேல் நான் வெறும் ஓசையே - 2

உன் அன்பு இசைவெள்ளம் என் நெஞ்சிலே
புது இராகப் புனலாகப் பாய்ந்து வந்ததே - 2
சுமையான பழம்போக்கு போய் மறைந்ததே
சுவையான புதுவாழ்வு கரைபுரண்டதே - 2
உன்னில் இணைந்தால் வாழும் புதுச்சுவையே
நீ இல்லையேல் அது பெரும்சுமையே - 2







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்