தியானப் பாடல்கள் | நல்ல நிலமாக மாறிடுவோம் |
நல்ல நிலமாக மாறிடுவோம் - நல்ல விளைச்சலைக் கொடுத்திடுவோம் முப்பதா? அறுபதா? நூறா? இறை ஆட்சியை வளர்த்திடுவோம் வழியோரமா இருக்காதே - தேவ வசனமும் உனக்குள்ளே நுழைக்காதே சாத்தான் எனும் எதிரி வந்து -- இறை வார்த்தையைக் கொட்டியே முழுங்கிடுவான் பாறை நிலமா மாறாதே - இறை வார்த்தையை தாழ்ந்திடச் செய்யாதே கஸ்ரங்களும் நஸ்ரங்களும் வந்தா வசனமும் காணாமல் போயிடுமே முள்ளுப் புதரா மாறாதே - இறை வார்த்தையை நெருக்கி போடாதே கவலைகளும் ஆசைகளும் வந்து வசனத்தை மறைச்சு கெடுத்திடுமே |