தியானப் பாடல்கள் | நல்ல ஆயன் நானே |
நல்ல ஆயன் நானே தந்தை என்னை அறிவதுபோல - என் மந்தையை நான் அறிவேன் அவையும் என்னை அறிகின்றன ஆயனின் அன்புக் குரலுக்கே - என்றும் ஆடுகள் இனிதே செவிமடுக்கும் அழியா வாழ்வை அவைகளுக்கே - நான் ஆனந்தமுடனே அளித்திடுவேன் மந்தைக்கு வாயில் நானன்றோ - என் வழியே நுழைபவன் மீட்படைவான் உள்ளே செல்வான் வெளிவருவான் - அவன் நல்ல மீட்பினைக் கண்டடைவான் |