Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் மூவொரு இறைவா சரணம்   


மூவொரு இறைவா சரணம்
முழுமுதல் தலைவா சரணம்
அடியேன் உன்பதம் சரணடைந்தேன்
படைப்பின் சிகரமாய் எனை மாற்றி
பதரான என் நிலை உயரச் செய்தாய்

போற்றுவேன் புகழுவேன் தினம் தினம்
உன் நாமமே
பறைசாற்றுவேன் உன் பெயர் என்றும்
என் வாழ்விலே

சோதனை சூழ்கையில் உடனிருந்தாய்
மன வேதனை போக்கி நல் வாழ்வளித்தாய்
அருட்பணி செய்கையில் அருகிருந்தாய்
இறைவாஆ...ஆ...
அருட்பணி செய்கையில் அருகிருந்தாய்
அல்லல்கள் நீக்கி அரவணைத்தாய்
அடிமை என் வாழ்வினை உயரச்செய்து
அரியணை ஏற்றி ஒளிரச் செய்தாய்
போற்றுவேன் புகழுவேன்...

பெயர் சொல்லி அழைத்து அருள் அளித்தாய்
உன் பணிதனை கொடுத்து உடன் நடந்தாய்
வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய்
இறைவா ஆ..ஆ..
வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய்
சிறியவர் உயர்ந்திட வழியும் செய்தாய்
அமைதியின் தூதனாய் எனை மாற்றி
அருள் வழி சென்றிட துணை புரிவாய்
போற்றுவேன் புகழுவேன்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்