தியானப் பாடல்கள் | மனதோடு பேசவா இயேசுவே |
மனதோடு பேசவா இயேசுவே மௌனம் உன் மொழி அல்லவா உன்னோடு பேசனும் உன் தோளில் சாயனும் உன்னோடு வாழ வேண்டுமே என் வானில் நிலவாய் என் வண்ணக் கனவாய் உன் வார்த்தை ஒளி வீசுமே என் தனிமை உறவாய் என் அருமை நிறைவாய் உன் வார்த்தை வளம் சேர்க்குமே துயரில் துணையாய் உயர்வில் மகிழ்வாய் உயிரில் கலந்தாய் உணர்வில் கரைந்தாய் உன் வார்த்தை உறவாகுமே உன் சொல் என் வாழ்வாகுமே ஆழ்கடல் கடந்தால் தீயினில் நடந்தால் உன் வார்த்தை வழி காட்டுமே பால்வெளி ஓடையும் பாலையில் பாதையும் உன் வார்த்தை உருவாக்குமே வானின் அமுதாய் அருளின் விதையாய் தியாக பலியாய் நீயே கதியாய் என் வாழ்வு உனைச் சேருமே உன் சொல் என் வாழ்வாகுமே |