தியானப் பாடல்கள் | மனமே என் மனமே |
ஸாநிநிஸஸாஸா ஸாநிநிஸஸாஸா ஸநிநிஸ ஸாரிமகரிநிஸா மனமே என் மனமே என் வாழ்க்கை உன் வசமே உயிரே என்னுயிரே என் நினைவும் உன் பதமே விடியும் புதுப்பொழுதில் என் வாழ்வும் புதிதாக விடியும் என்றென்றும் என் இதயம் இதமாக நீ எனில் என்றும் வாழ்ந்திட வேண்டும் வார்த்தை வாழ்வாக நான் உந்தன் பாடல் பாடிட வேண்டும் தினமும் மகிழ்வாக உன்னில் இணைந்து வாழ நான் கொடியாய் படர்ந்திடுவேன் கனிதரும் மரமாய் செழிக்க உன் அருளை நாடிடுவேன் (2) உண்மை நீதி நெஞ்சில் வாழ உலகம் படைத்தீரே என் உள்ளம் மகிழ உறவில் வளர ஊக்கம் தருவீரே புவி வாழ வளமாக உன் ஆசீர் தந்தாயே என் பார்வை நலமாக உன் பார்வை பெற்றாயே நீ எனில் என்றும் வாழ்ந்திட வேண்டும் வார்த்தை வாழ்வாக நான் உந்தன் பாடல் பாடிட வேண்டும் தினமும் மகிழ்வாக மனிதன் தேடிடும் செல்வம் ஒருநாள் மறைந்து விடும் மாறா தேவன் வார்த்தை என்றும் நிலைத்து நிற்கும் (2) சொல்லில் செயலால் உலகை மதிக்க வரங்கள் தருவீரே உம் சொற்படி நடந்தால் சுகங்கள் பெற்று வளமாய் வாழவேனே புவிவாழ வளமாக உன் ஆசீர் தந்தாயே என் பார்வை நலமாக உன் பார்வை பெற்றாயே நீ எனில் என்றும் வாழ்ந்திட வேண்டும் வார்த்தை வாழ்வாக நான் உந்தன் பாடல் பாடிட வேண்டும் தினமும் மகிழ்வாக |