தியானப் பாடல்கள் | ஐயா உன் கருணையை |
ஐயா உன் கருணையை பேரன்பின் பெருமையை என்னென்று நான் சொல்வேன் (4) புகழ்பாக்கள் நான் பாடி திருப்பயணம் நான் செல்ல உன் வேதம் வழிகாட்டும் விளக்கானதே ஆ....ஆ...ஆ......ஆ....... புகழ்பாக்கள் நான் பாடி திருப்பயணம் நான் செல்ல உன் வேதம் வழிகாட்டும் விளக்கானதே தடையெல்லாம் படியாக நீ மாற்றினாய் முன்னேறி நான் செல்ல துணிவூட்டினாய் உன்னன்பை நலம் வாழ பணியாகினாய் உயிரூட்ட வாழ்வாக உணவாக்கினாய் என் சொந்தம் என் பந்தம் எல்லாம் நீ நீ யேசுவே நீ யேசுவே ஆ....ஆ...ஆ......ஆ.......ஆ....ஆ...ஆ......ஆ....... பா.......மபாமக கமகபமா ஸககாஸா என் உள்ளம் சோர்ந்தாலும் என் கால்கள் தளர்ந்தாலும் கரம் தந்து தோள் மீது எனைத் தாங்கினாய் ஆ....ஆ...ஆ......ஆ....... என் உள்ளம் சோர்ந்தாலும் என் கால்கள் தளர்ந்தாலும் கரம் தந்து தோள் மீது எனைத் தாங்கினாய் சொல்லொன்று நீ பேசி வலுவூட்டினாய் அல்லல்கள் பிணி போக்கி குணமாக்கினாய் எனக்காக உயிர் தந்த நல் இயேசுவே உனக்காக என்னாளும் நான் வாழுவேன் என் உள்ளம் நீ வாழும் தேவாலயம் என் தெய்வமே என் தெய்வமே |