தியானப் பாடல்கள் | இதயவீணை எடுத்து வந்தேன் |
இதயவீணை எடுத்து வந்தேன் இன்னிசை பாட சுரங்களில் தழுவி நரம்பினை மீட்ட இசையெழவில்லை ஏன் இறைவா மழலையின் பருவம் இசைத்தது - உன் வீணையின் இசையும் மணந்தது வாலிபப்பருவம் இசை மறந்து கோலமே கண்டது என இருந்தால் இiசையினில் மணமும் கமழ்வதேது என் மனமும் மகிழ காண்பதேது வீணையைச் செய்தவன் நானிருக்க நீ வீணிலே எங்கோ அலைகின்றாய் தூணிலும் துரும்பிலும் வாழுமெனை துணைகொண்டு மீட்ட நாளெல்லாம் இன்னிசை வெள்ளம் பெருகாதோ இசையினில் என் மனம் உருகாதோ |