Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் இரக்கம் நிறைந்த தெய்வமே  
இரக்கம் நிறைந்த தெய்வமே
இதயம் திறந்து அழைக்கின்றேன்
உன்னைப் பாட வருகின்றேன்
உன்னை அன்பு செய்கின்றேன்
இரக்கம் நிறைந்த தெய்வமே
இதயம் திறந்து அழைக்கின்றேன்

பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும்
பெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும்
உதயம் தேடும் மலரைப் போலவே
உயிரின் உயிரே உன்னைத் தேடினேன்
நிலவில்லா வானம் போலவே
நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை
நம்பிக்கையின் நாயகா
நலன்களின் தேவா வா
வார்த்தை ஒன்று பேசுமே
வளங்கள் எல்லாம் கூடுமே

தேடும் உலக செல்வம் நிறைந்தாலும்
பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும்
அலைகள் ஓயாக் கடலைப் போலவே
அன்பே உனது அருளை வேண்டினேன்
தாயில்லா குழந்தை போலவே
தவிக்கின்றேன் ஏக்கம் போக்குமே
முழுமுதல் இறைவனே
மூவொரு வேந்தனே
காலம் கடந்த தேவனே
உன் கருணை ஒன்றே போதுமே









 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்