தியானப் பாடல்கள் | இறைவன் துணையுடன் |
இறைவன் துணையுடன் துணிந்தே போராடி நன்மைகள் செய்திடுவோம் நிறைகளை வளர்த்து குறைகளைக் களைவதில் என்றும் நாம் வெற்றி காண்போம் இறைவா நீ அருகில் இருந்தால் என்றுமே பயமே இல்லை கோலியாத்தின் தலை வென்ற தாவீதைப்போல் வீரமிகு விசுவாச நடைபோடுவோம் உனமையைச் சொன்னால் இகழப்பட்டோம் பொய்மையைச் செய்தால் ஏத்தப்பட்டோம் இது என்ன உலகமோ புரியவில்லை இதைக் கண்டு யாமும் கலங்கவில்லை முதிர்ந்து விழுந்திடும் இலைகள் நிலத்தில் விழுந்தால் உரமாகும் சோர்ந்து அழுதிடும் வாழ்வை அவரிடம் கொடுத்தால் சுகமாகும் பகைவரை மன்னித்து ஏற்றுக் கொண்டால் பழிவாங்கும் படலம் தொடர்கிறது புகைபோல் மறைவதா உன் வார்த்தை புதுமை படைக்குமே உன் வார்த்தை முதிர்ந்து விழுந்திடும் இலைகள் நிலத்தில் விழுந்தால் உரமாகும் சோர்ந்து அழுதிடும் வாழ்வை அவரிடம் கொடுத்தால் சுகமாகும் |