தியானப் பாடல்கள் | இறைவா உம்மை நோக்கி |
என் இறைவா உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகிறேன் இதயச் சுடரே எழுந்து வா இறைவா உம்மை நோக்கி எந்தன் உள்ளம் உயர்த்துகிறேன் எந்தன் வாழ்வின் தீபமே உம்மில் நம்பிக்கை கொள்கிறேன் எந்தன் உள்ளம் எழுந்து வா இதயச் சுடரே எழுந்து வா இறைவா உமது பாதைகளையே அறியச் செய்தருளும் உமது உண்மை நெறியில் நடத்தி என்னைக் காத்தருளும் ஏனெனில் நீர் எனக்கு என்றும் மீட்பராம் கடவுள் கலக்கம் துன்பம் வாழ்வில் இல்லை மகிழ்ச்சி தந்தவரே எந்தன் உள்ளம் எழுந்து வா இதயச் சுடரே எழுந்து வா ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் நலமாய் வாழ்வாரே ஆண்டவர் தம் அன்பு உறவும் அவருக்கே சொந்தம் ஏனெனில் நீர் நேர்மை உள்ளவர் நல்லவர் அன்றோ உடன்படிக்கை உறவை நம்பி இதய மலர் திறந்தேன் எந்தன் உள்ளம் எழுந்து வா இதயச் சுடரே எழுந்து வா |