தியானப் பாடல்கள் | இறைவா நீ தந்த வாழ்வில் |
இறைவா நீ தந்த வாழ்வில் துயரில்லையே இமயமே என் எதிர்வரினும் கவலையில்லையே இதயம் நாடும் உன் உறவில் அன்பின் பந்தமே இயேசுவே நான் தேடும் வாழ்வின் சொந்தமே எந்தன் உள்ளம் துள்ளிப் பாடும் அன்பின் கீதமே இறைவனே என சொந்தமென்று சொல்லி மகிழுமே இருந்தாலும் இறந்தாலும் உனக்காகவே உன் பணியைச் செய்து நிறைவுகாணும் எந்தன் இதயமே வாழும் உயிரில் உந்தன் சாயல் கண்டு உணர்த்துவேன் மனித நேயம் கொண்டு வாழும் மனங்கள் செய்குவேன் ஏற்றத்தாழ்வு எவ்வடிவம் எடுத்தாலுமே நான் எதிர்த்து நின்று மனித மாண்பின் காவலாகுவேன் |