| தியானப் பாடல்கள் | இறை வார்த்தை |
|
இறை வார்த்தை விதையாக - உன் இதயத்தில் விதைக்கின்றோம் அந்த வார்த்தை ஒளியினிலே கேட்டும் கேளாமலும் பார்த்தும் பாராமலும் இறைவாரர்த்தை உமதானால் வழியில் விழுந்த விதையாகும் அது பறவைகள் இரையாகும் அது பலனற்ற விதையாகும் கேட்டு அறிந்திருந்தும் நல் பாதை மறந்திருந்தார் இறைவார்த்தை உமதானால் பாறையில் விழுந்த விறையாகும் அது பலன்தர பயிராகும் - அது வேரின்றிக் காய்ந்துவிடும் கேட்டு அறிந்திருந்தும் வாழ்வில் இருந்து விட்டால் இறைவார்த்தை உமதானால் முள்ளில் விழுந்த விதையாகும் அதை முட்கள் நெரித்துவிடும் அது பயனின்றிப் போய்விடும் கேடடு அறிந்து கொண்டு வாழ்வில் ஏற்று வாழ்ந்தால் இறைவார்த்தை உமதானால் நல்ல நிலத்தில் விழுந்த விதையாகும் அது பலன் தரும் வழியாகும் அது பல நூறு மடங்காகும் இறையாட்சி விதையாக - உன் இதயத்தில் விதைக்கின்றேன் அந்த வார்த்தை ஒளியினிலே நான் நாளும் வழிநடக்க நல் வாழ்வில் ஒளியாக நாம் நாளும் வளம் பெறுவோம் |