தியானப் பாடல்கள் | எத்தனை ஆயிரம் தடை வந்தபோதும் |
எத்தனை ஆயிரம் தடை வந்தபோதும் எனக்கில்லையே என் சிந்தனை யாவிலும் உனையன்றி வேறேது நானில்லையே அருட்கடலே அரும் பொருளே மாறாத உன் அன்பால் என் வாழ்வில் நிம்மதி தேடும் தேடி நான் சேர்த்த செல்வம் நிம்மதி தரவில்லையே துன்பம் வரும்போது சொந்தம் என் துணை வரவில்லையே என்னை மறந்து நான் அழுதேன் கண்ணீன் நீரை நீ துடைத்தாய் எந்தன் வாழ்வில் நிலை இழந்தேன் நெஞ்சில் உறுதி கொடுத்தாய் மலையென எழுந்திடும் கவலைகளோ பனியென வாழ்வில் மறைந்திடுதே இனி உலகம் முழுதும் எனைத் தடுக்கும் பொழுதும் உன்னோடு என்றும் வாழ்வேன் ஓடி இன்பத்தைத் தேடி புவியினில் நான் அலைந்தேன் பொய்மை நிறைகின்ற நிலையில் ஆடையாய் நான் அணிந்தேன் எந்தன் வேடம் நீ கலைத்தாய் உந்தன் காயம் நீ பதித்தாய் எந்தன் குறையை நீ மறந்தாய் உந்தன் பாத நிழல் கொடுத்தாய் ஆயிரம் ஆனந்த இராகங்களை என் மனம் தினம் தினம் பாடிடுதே உனதுறவில் கிடைக்கும் மனம் நிறையும் மகிழ்வு என்னோடு என்றும் சேரும் |