தியானப் பாடல்கள் | எரிகின்ற தீபமாய் எதிர்நோக்கு |
எரிகின்ற தீபமாய் எதிர்நோக்கு ஒளிர்கின்றது இறைவா எம் பாடல் உமை நோக்கி மகிழ்வாக எழுகின்றது. அனுபல்லவி: என்றென்றும் குறையாத உயிரூற்று நீரல்லவா தலைவா எம்வாழ்வில் யாமெல்லாம் உம்பாதம் சரணல்லவா! எல்லோரும் (கோரஸ்): வரலாற்று நாயகனே, வரும்வாழ்வும் வகுப்பவனே நிறைவாக உன்பாதம் பணிகின்றோம் இத்தனை ஆண்டுகளாய் பெற்றஉம் அன்பினையே நித்தம் எம் வாழ்வாலே பாடிடுவோம்! பல்லவி நாடுகள், மொழிகள், மக்கள் இனங்களுக்கே ஒளியாய்த் தேடிடும் உம்வாக்கு உடன்பிறப் பாகினாரே. தன்பலம் இழந்து சிதறுண்ட மாந்தருக்கு உம்மகன்தான் தங்கும் வீடாகினார்! (வரலாற்று நாயகனே) எத்தனை பரிவுமக்கு எத்தனை பொறுமை கண்டோம் - இறைவா! அத்தனை மாந்தரையும் கரையேற்றும் அருள்கண்டோம். விண்ணுலகும் மண்ணுலகும் மறுஆக்கம் அடைந்திடுமே தலைவா விடுதலை வழங்குகின்ற ஆவியின் பொழிதலினால் (வரலாற்று நாயகனே) உம்பார்வை பூமியின்மேல் விழுந்தது மீட்பதற்கே தந்தாய் எம்கடவுள் எங்கள் காலத்துள்ளே பிறந்தாரே! உமக்காய் எமக்காய் மனிதனானாரே உமை அடைந்திட எம் வழியானாரே! (வரலாற்று நாயகனே) |