தியானப் பாடல்கள் | எந்தன் தெய்வமே |
எந்தன் தெய்வமே என் இனிய தெய்வமே - உனக்காக நான் என்றும் வாழுவேன் 2 என்றும் பாடுவேன் உம் வரவை நாடுவேன் எனக்காக நீ எனக்காக இதயத்தில் குடியிருக்கும் என்னருமை வேந்தனுக்கு என்றும் பாடுவேன் நான் என்றும் பாடுவேன் -2 அன்பே என் ஏக்கமெல்லாம் அன்றாடம் தீரும் வரை அன்பாக உன்னை அழைப்பேன் எந்தன் தெய்வமே 2 உனக்கென்று நான் வாழ்வேன் உன் அன்பை சுவைத்திடுவேன் -2 உன்னில் நான் நிலைத்திட உம்மருள் தாருமே -2 உம் வழியில் நான் நடந்து உன்னைப் பின் தொடர்ந்திடுவேன் நாளும் என்னைக் கைவிடாமல் காக்கும் தெய்வமே -2 உம் சொல்லை நான் கேட்பேன் உம் செயலை நான் செய்வேன் -2 உன்னில் நான் வாழ்ந்திட உம்மருள் தாருமே -2 |