தியானப் பாடல்கள் | என்னோடு இணைந்திருந்தால் |
என்னோடு இணைந்திருந்தால் - இறைவா என்னுள்ளே கலந்திருந்தால் இதயத்தில் இரக்கம் சுரக்கும் மனதினில் மகிழ்ச்சி பிறக்கும் குடும்பத்தில் அமைதி நிலைக்கும் குறைகளில் நிறைவு கிடைக்கும் என் அன்பும் வெளியாகும் என் துன்பம் குறைவாகும் என் கால்கள் வலுவாகும் என் நோய்கள் குணமாகும் என் தேகம் பலமாகும் என் சோகம் சுகமாகும் என் வார்த்தை இனிதாகும் என் வாழ்க்கை சிறப்பாகும் - 2 என் கண்கள் ஒளியாகும் என் நெஞ்சம் திடமாகும் என் பாதை புதிதாகும் என் பார்வை கனிவாகும் என் பாவம் மறைவாகும் என் கோபம் தணிவாகும் என் ஆன்மா நலமாகும் என் ஆயுள் மிகையாகும் - 2 |