தியானப் பாடல்கள் | எங்கெங்கும் வாழ்ந்திடும் காவியமே |
எங்கெங்கும் வாழ்ந்திடும் காவியமே அது என்றென்றும் வாழ்ந்திடும் ஓவியமே உந்தன் கோவனத்தில் ஒரு மலராகி உந்தன் ஏழிசையில் நான் ஓரு ராகமே உன்னைப் பாராத பொழுதெல்லாம் பாழாகினேன் உனில் கலக்காத கணமெல்லாம் கனலாகினேன் நீ இல்லா என் வாழ்வின் உறவுகள் நிலவெல்லாம் இருளான இரவுகள் சங்கமத்தின் சந்தோசங்கள் என் சங்கீதத்தில் பொங்கி வருமே உலகோரின் ஊற்றும் நீயே உற்றமும் நீயே வாழ்வின் விதையும் நீயே எருதும் நீயே உனைத் தேடாத இடமில்லை இவ்வுலகில் உனைப் பாடாத மனமில்லை மனிதரிலே உன் இல்லம் குயில்களின் கூடுகள் மௌனங்களே அதன் ராகங்கள் சத்திய தேவன் பாதங்கள் - நான் நித்தமும் நாடும் சொந்தங்கள் வாழ்வின் விடையும் நீயே ஒளியும் நீயே எந்தன் சுதியும் நீயே உறுதியும் நீயே |