தியானப் பாடல்கள் | எனக்கென்று ஒரு சொந்தமே |
எனக்கென்று ஒரு சொந்தமே - அது உனையன்றி எனக்கில்லையே எனக்கென்று ஒரு சொந்தமே என்றென்றும் நான் வாழுவேன் உன்னில் எந்நாளும் நான் வாழ்வேன் என் சொந்தம் நீயானதால் எனக்கென்றும் பேரின்பமே மலரா என் இதயத்தை மலர வைத்தாய் மடியா உன் உயிரோடு இணையவைத்தாய் அறிந்தேன் நான் புரிந்தேன் உன் பேரன்பையே மடிப்பேன் நான் இழப்பேன் என் வாழ்வையே (2) சோகங்கள் தோதனைகள் எனைத் தொடர்ந்தாலும் உன் உறவொன்று என்றென்றும் எனைத் தேற்றுமே வாழ்ந்தாலும் முடிந்தாலும் இனி என்றுமே உன் அன்பை ஒருநாளும் மறவேனையா (2) |