Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் என் வாழ்வின் ஆதாரம்  


என் வாழ்வின் ஆதாரம்
என் இயேசு நீர்தானே ஐயா
எனையாளும் என் மன்னவா
என் வாழ்வின் துணையாக வா (2)

சூரியன் இல்லையென்றால் நிலவின் கதியென்ன
எல்லாமே எனக்கு நீ இனியும் குறை என்ன
கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே
காலைநேர தென்றலாக கதியோடு என்னுள் வாருமே

மலருக்கு மணமாக பயிருக்கு மழையாக
எனக்குள்ளே புதிராக இருக்கும் வல்லவரே
நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை
எனக்குத் துணையாய் நீயிருக்க
என்னைச் சூழ்ந்து அன்பே வாரும்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்