Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் என் பாடல் நீயே  
என் பாடல் நீயே என் வாழ்வின் தேடலே
உளமென்னும் கோவிலில் உறைந்திட வா
என் பாடல் நீயே என் வாழ்வின் தேடலே
உளமென்னும் கோவிலில் உறைந்திட வா

காலை எழும் கதிராய்...........
காலை எழும் கதிராய் ஒளிர்ந்திடும் இதயமே
நாளெல்லாம் உனைப்பாடும் என் வாழ்வே
உனை வாழ்த்தும் போதெல்லாம் ஆனந்தமே
கரம் கோர்க்கும் நாளெல்லாம் சுகராகமே
தாம் தித் தோம் நம்பிட

உனது விழிகள் நீ தந்த மொழிகள்
எனது வாழ்வில் நிலையாகுமே
உனது வார்த்தையில் .............
ஆ...ஆ..ஆ...ஆ...ஆ..
உனது வார்த்தையில் உருவான பதரே
என்பணி பலன் தர அருள்பவனே
இசையாய் கிளம்பி நீ வருவாய்
நிலனாய் உடனே நீ நடுவாய்
வருவாய் வரமே நீ தருவாய்
உனையே காண அருள்புரிவாய்
வாழ்வோடு போராடும்
வாழ்வாக வந்தாயே இறைமகனே
நீ தந்த எம் வாழ்வை தந்தேனே நானிங்கு
வந்திடு மனிதம் உருப்பெறவே

உனது பணிகள் ஆவியின் கனிகள்
எனது வாழ்வின் வரமாகுமே
உனது வார்த்தையில் ...............
ஆ...ஆ..ஆ...ஆ...ஆ..
ஒளியாகும் வாழ்விலே
பாதையில் பயமேது நான் நடக்க
ஒளியே ஒளியின் ஒளி நீயே
உயிரே உயிரின் உயிர் நீயே
அன்பே விளையும் அருட் சுனையே
அமுதைப் பொழியும் அட்சயமே
மாறாத உன்னபில் மழையாக வந்தாயே
மனமென்றும் பொய்கை மலர்ந்திடவே
நல்லாயன் உன் வாழ்வில் வாழ்விக்கும் நீரூற்றை
பயணத்தில் இணையும் மலரணையே











 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்