தியானப் பாடல்கள் | என் நெஞ்சிலே |
என் நெஞ்சிலே என் ஜீவனை தினம் பாடும் ஒரு பாடல் நீயாகுவாய் உன் நெஞ்சிலே ஓயாமலே பண்பாடும் புதுராகம் நானாகுவேன் உயிர் தேடும் உறவாகுவாய் உனில் வாழும் உயிராகுவாய் உன் சொல்லில் உலகெல்லாம் உருவாக்கினாய் உன் அன்பில் உலகில் என் உயிராகினாய் உன் பாதையில் நாள்தோறும் செல்ல நான் உன் பின் செல்ல உன்னோடு பலியாகுவேன் உன்னாலே உருமாறுவேன் உன் வார்த்தை நான் பேசும் மொழியாகுவாய் உன் ஆசை நான் கேட்கும் வழியாகுவாய் உன் சாயலில் உலகெல்லாம் செல்ல உறவின் வழி வெல்ல உன்னோடு பலியாகுவேன் உன்னாலே உருமாறுவேன் |