தியானப் பாடல்கள் | என் கரம் பிடித்த |
என் கரம் பிடித்து எனை நடத்து என்னுடன் நடந்து வழிநடத்து (2) வருவாய் இயேசுவே வழித்துணையே என் வாழ்க்கைப் பயணம் முழுவதுமே இருளின் ஆட்சித் தொடங்கிவிட - என் இதயம் சோர்ந்துத் தளர்ந்துவிட (2) என்னுடன் நீயும் இல்லாமல் வேறுஎங்கோ போவது சரிதானா என்னுடன் நீயும் நடந்துவந்தால் - இங்கு எல்லாம் அழகாய் மாறிவிடும் (2) என்னுடன் நீயும் இல்லை என்றால் என் உலகே இருளில் மூழ்கி விடும் |