தியானப் பாடல்கள் | என் இதயக் கோயிலில் |
என் இதயக் கோயிலில் உறவாடும் தெய்வம் நீ என் இளமை நாளுமே ஆனந்த கீதம் நீ என் சோர்ந்த மனதில் நீங்காத ஆறுதல் நீ இறைவா நீயே என் அருள் வாக்கு கருணையின் வடிவம் நீ காரிருளின் ஒளியும் நீ மனசில் ராகம் நீ உயிரில் தாளம் நீ மழலையின் சிரிப்பில் நீ உழைப்பவன் எண்ணம் நீ காலங்களில்லாக்கனி ஏழைகளின் பதிலும் நீ இறைவா நீயே என் அருள்வாக்கு கலைகளின் உருவம் நீ காலத்தின் விடியல் நீ ஞானதீபம் நீ நற்கருணை நாதன் நீ வருடத்தில் வசந்தம் நீ வேலையில் தென்றல் நீ கருணையில் நண்பனும் நீ மனிதருள் மனிதனும் நீ இறைவா நீயே என் அருள்வாக்கு |