தியானப் பாடல்கள் | என் ஆன்மா இறைவன் புகழை |
என் ஆன்மா இறைவன் புகழை பாடி மகிழ்கின்றது எந்தன் மீட்பர் கடவுள் செயலை போற்றிப் புகழ்கின்றது என்றும் பெருமை தருகின்றது அடிமை எந்தன் அவலநிலையை கருணைக் கண் கொண்டு நோக்கினார் கொடிய நிந்தை பழியின் சுமைகள் அணுகிடாது காத்திட்டார் தலை முறைகள் என்னைப் போற்றும் பேறும் எனைத் தொடரும் இந்த அரிய பெரிய செயல்கள் எல்லாம் இறைவன் பெயரைப்பாடுமே தூயவர் என முழங்குமே இன்றும் என்றும் இரக்கம் காட்டும் இறைவன் எதிலும் பெரியவர் அவர் உள்ளச் செருக்கில் சிந்திப்போரை சிதறி ஓடச் செய்கிறார் இரக்கப் பெருக்கும் இறைவன் கனிவும் அவரில் அஞ்சும் மனிதர்க்கே இனி உறவின் நிறைவும் அவரின் துணையும் அடியேன் வாழ்வில் தொடருமே அன்பு எங்கும் வாழுமே செல்வப் பெருக்கில் தன்னை இழப்போர் வெறுமை சுமையால் வாடுவர் ஆளும் அரியணை அமரும் கொடியோர் ஆற்றில் பதராய் மாறுவார் தாழ்ந்த நிலையில் உள்ள மாந்தர் உயர்வு அடைந்து மகிழுவார் இங்கு பசியுமில்லை பழியுமில்லை நலன்கள் சூழும் வாழ்விலே பலன்கள் சேரும் அவரிலே |